skip to main |
skip to sidebar
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளி விழா கொண்டாட்டம்
மாபெரும் உணவுத்திருவிழா மற்றும் பெண்களுக்கான
சமையல் போட்டிகள் - 22.07.2012.
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக,
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள முத்துநகர் கடற்கரையில்; வாரந்தோறும்
ஞாயிற்றுக்கிழமைகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக 22.07.2012 ஞாயிற்று கிழமையன்று மாலையில் பொழுதுபோக்கு
அம்சங்களை உள்ளடக்கிய மாபெரும் உணவுத்திருவிழாவினை நடத்திட, தூத்துக்குடி
மாவட்ட வெள்ளிவிழா குழுவினரும், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையும் இணைந்து
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாபெரும் உணவுத்திருவிழாவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரியமான, பிரசித்தி பெற்ற, புதுமையான உணவு
வகைகளை மக்களுக்கு வழங்கிட, பெயர்பெற்ற 30க்கும் மேற்பட்ட உணவகங்கள்
மற்றும் வணிக நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
மேலும், இந்த உணவு திருவிழாவில் பொதுமக்களும், பெண்களும் கலந்து கொள்ளக்கூடிய
1.ஐஸ்கிரீம் அழகுபடுத்தும் போட்டி (Ice Cream Topping)
2.சாண்ட்விச் தயாரித்தல்
3.காய்கறிகள் அலங்கார போட்டி,
4. நூடுல்ஸ் மற்றும் வெரைட்டி சாப்பாடு (Fried Rice) தயார் செய்தல்,
5.கிரீம் கொண்டு அழகுபடுத்துதல் (Fresh Cream Decoration)
ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுடைய பெண்கள் தங்களது பெயரை dofssatuty@gmail.com என்ற மின்னஞ்சல்
அல்லது 9791428191 ஃ 7708998399 என்ற அலைபேசி எண்களில் 22.07.2012 மாலை 3.00 மணிவரை பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு செய்த நபர்களிலிருந்து 22.07.2012 மாலை 5.00 மணியளவில் முத்துநகர்
கடற்கரையில் குலுக்கல் முறையில் ஒவ்வொரு போட்டிகளுக்கும் ஐந்து நபர்கள்
தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
போட்டிக்கு தேவையான அனைத்து மூலப்பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் அனைத்து
பொருட்களும்நகரின் பிரபலமான உணவகங்கள் ஃ பேக்கரிகள் மூலமாக வழங்கப்படும்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், உணவுத் திருவிழாவில் பங்குபெறவரும் பொதுமக்களுக்கான அதிர்ஷ்ட
போட்டி மற்றும் வினாடிவினா (குயிஸ்) போட்டிகளும் நடைபெறும். இந்த
வெள்ளிவிழா கொண்டாட்ட உணவுத்திருவிழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள
வருமாறு தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்ட குழுவின் தலைவர் ஃ
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆஷிஷ் குமார், இ.ஆ.ப., தெரிவித்தார்
Posted in: Events
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment