தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் முன்பு உள்ள கலையரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் மூன்றாம்நாள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவில நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் ஜான்சிராணி, அதிமுக மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் சங்கரபாண்டியன், சண்முகசுந்தரம், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவரும், வெள்ளிவிழாக்குழு ஒருங்கிணைப்பாளருமான பரமசிவம் வரவேற்றார். தொடர்ந்து பேராசிரியர் சங்கர்ராஜன் தலைமையில் வினாடிவினா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதுரை ஹார்விபட்டி முருகேசன் கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது. இறுதியில் மாவட்ட வெள்ளிவிழா கலைபண்பாட்டு உறுப்பினரும், ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனருமான தேன்ராஜா நன்றி கூறினார்.
விழாவில் கோவில்பட்டி நகர்மன்ற துணை தலைவர் ராமர், கயத்தாறு இலக்கிய அணி செயலாளர் அல்லிக்கண்ணன், ஆக்டிவ் மைண்ட்ஸ் சேர்மராஜன், கணேசராஜா, நடராஜன், தமிழ்செல்வன், ஓட்டப்பிடாரம் அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் விஜயன், கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முருகேசன், கோபால், தொழிலதிபர் செல்வமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment