Sunday, 20 May 2012

கோவில்பட்டியில் வெள்ளி விழா கொண்டாட்டம் தொடக்கம்

 
 தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி 25வது ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு மாவட்ட முழுவதும் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டியில் வரும் 8.10.12 வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் த
...ொடக்க விழா கோவில்பட்டி செண்பகவல்லியம்மன், பூவநாத சுவாமி திருக்கோவில் முன்பு அமைந்துள்ள மின்னொளி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கோட்டாட்சியர் பொன்னியின்செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ருக்குமணி முன்னிலை வகித்தார். வெள்ளிவிழா கொண்டாட்டத்தினை கோவில்பட்டி எம்.எல்.ஏ.கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி வட்டாட்டசியர் நடராஜன்,பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம், தொழில் அதிபர் ஜேக்ப்ராஜாமணி, ராஜீ, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலமுருகன், விஜயராஜ், நகர்மன்ற உறுப்பினர் அருணாச்சலசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெ.பெல்லா நன்றி கூறினார். பின்னா கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

0 comments:

Post a Comment

 
-