Tuesday 28 February 2012

வெள்ளிவிழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் முடிவு

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை
ஒட்டி அடுத்த மாதம் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட மாவட்ட நிர்வாகம் முடிவ செய்துள்ளது. இதனை ஒட்டி மக்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கடந்த 1986ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி பிரிக்கப்பட்டு புதிய தூத்துக்குடி மாவட்டம் உதயமாகியது.

கடந்த ஆண்டு (2011) அக்டோபர் மாதம் 19ம் தேதி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றது.இதனை ஒட்டி நடப்பாண்டினை வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னோடி ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா ஆண்டினை சிறப்பா கொண்டாட பொதுநல ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்படுவதை

மக்கள் அறியும் வண்ணம் அடுத்த மாதம் (பிப்ரவரி 2012)ல் நீண்டதூர ஓட்டப்பந்தயம் (மாரத்தான்) நடத்திட முடிவு செய்யப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் வளர் ச்சி மற்றும் சாதனைகள் குறித்த மலர் வெளியிடவும், வெள்ளிவிழா ஆண்டினை குறிப்பிடும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் நுழைவு வாயில்கள், நினைவு சின்னங்கள் அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.வெள்ளிவிழா ஆண்டினை முன்னிட்டு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், பொது அறிவுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் போன்றவை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டன.

0 comments:

Post a Comment

 
-