தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளதால் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. 29.7.2012 மாலை பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
தூத்துக்குடி முத்துநகர கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் சென்டை மேளத்துடன் ஆரம்பமானது. பின்னர், விஜய் டிவி புகழ் நீயா நானா இயக்குனர் ஆண்டனி சிறப்புரை ஆற்றினார். பின்னர், ரோபோ சங்கர், கிரி குழுவினரின் அசத்தலான நகைச்சுவை மற்றும் மிமிக்ரி நிகழ்ச்சிகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து விஜய் டிவி புகழ் விஜயன் வழங்கும் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர், வல்லநாடு இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் நெல்லை ஆர்ப்பிட் நடன பள்ளி மாணவ, மாணவியர்களின் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், சென்னை சாதக பறவைகள் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
நேற்றைய வெள்ளிவிழா கலைநிகழ்ச்சிகள் முழுவதும் முழுக்க முழுக்க பொழுது போக்கு அம்சங்களுடன் நடந்தது. சுமார் 5 மணிநேரம் பொதுமக்கள் கண்டுகளித்தனர். முதன்முறையாக திறந்தவெளியில் இலவசமாக நிகழ்ச்சிகள் நடந்ததால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பொது மேலாளர் எஸ். செல்வன்ராஜதுரை, ஏஎஸ்பி மகேஸ், உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந் கொண்டனர்.
0 comments:
Post a Comment