பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கலை நிகழச்சிகளை கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Memorial of Kattabomman
West of Panchalankuruchi, what remains is just a memorial of Kattabomman inside a small rebuilt fort.
Kazhugumalai
Kazhugumalai is a virtual treasure trove of Jaina art and culture dating back to the 8th century.
Ettayapuram Palace:
Ettayapuram Palace, Umarup Pulavar Dargah Bharathiar and Mani Mandapam, built in the memory of Subramania Bharathiyar, are the main tourist attractions of this place. .
Vallanadu Blackbuck Sanctuary
The Sanctuary is located in Vallanadu village of Srivaikundam Taluk on Tirunelveli – Thoothukudi road at a distance of 18Km from Tirunelveli. The Vallanadu Blackbuck sanctuary is an isolated hillock with scrub forest..
Showing posts with label Events. Show all posts
Showing posts with label Events. Show all posts
Saturday, 22 September 2012
ஒருநிமிடம் மட்டும் - நாளை மாலை வரை முன்பதிவு!!
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கலைநிகழ்ச்சியில் இடம்பெறும் "ஒரு நிமிடம் மட்டும்" நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பும் போட்டியாளர்கள் நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக நாளை (23ம் தேதி) முத்துநகர் கடற்கரையில் அரசு பொருட்காட்சி அரங்கில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதில், "ஒரு நிமிடம் மட்டும்" (Just a Minute JAM) என்னும் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு கலையரங்க மேடையில் ஒரு நிமிடம் மட்டுமே ஒதுக்கப்படும். இந்த ஒரு நிமிடத்தில் போட்டியாளர்கள் தங்களது தனித்தன்மையை சொற்பொழிவு, பாடல், நாட்டியம், மிமிக்ரி, மேனோ ஆக்டிங் ஆகிய வகையில் மேற்கொள்ளலாம்.
சிறப்பாக நிகழ்ச்சி செய்யும் போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த போட்டிகளுக்கான பதிவினை முத்துநகர் கடற்கரை பொருட்காட்சி அரங்க அலுவலகத்தில் நாளை (23ம் தேதி) மாலை 5 மணி வரை மேற்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Saturday, 15 September 2012
Monday, 3 September 2012
Thursday, 30 August 2012
Saturday, 25 August 2012
Pets and dog show today
Arrangements are being made to host the Pets and Dog
show by the officials of the department of Animal Husbandry at the newly
created Pearl city beach opposite Caldwell School on beach road.
The programme is scheduled to be held on Sunday (August 26) as part of silver jubilee celebrations to attract animal lovers.
Registration
is free and the participants can register from 3 p.m. to 4.30 p.m. at
the beach, according to Joint Director of Animal Husbandry, Tuticorin,
S. Ganapathi.
All breeds of puppies would take part and a fashion show would be held subsequently for the pet animals.
As
part of the programme, obedience of the animals to the owners’ commands
would be gauged.Besides, individual breed show would also entertain the
spectators.
Pet
animals including dogs, love birds, parrots, ornamental poultry and
cats would be allowed to compete in the show and prizes would be given
to the winners.
Moreover, Central Industrial Security
Force personnel were likely to bring the pets for dog skill programme
and performance of the District dog squad is also expected.
A
panel of adjudicators from other districts including Tiruchi,
Tirunelveli and a Member from Veterinary Council of India would judge
the performance of animals and award prizes.
Event
Management Committee comprising Dr. Ganapathi, A. Joseph Raj, Veterinary
Assistant Surgeon, Tuticorin, M.A. Johnson Charles, Veterinary
Assistant Surgeon, Vallanad and D. Nandha Gopal, Clinician would monitor
the proceedings.
Wednesday, 22 August 2012
தூத்துக்குடியில் அரசு பொருட்காட்சி செப்.6ல் துவக்கம் : மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு நட்க்கிறது
தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு சார்பில் பொருட்காட்சி செப்டம்பர் 6ம் தேதி துவங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் ஆண்டு தோறும் பனிமயமாதா கோவில் திருவிழாவையொட்டி நகராட்சி சார்பில் தருவை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வந்தது. கடந்த 1990ம் ஆண்டு நகராட்சி சேர்மனாக இருந்த என்.பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைப்பத்ற்காக நகராட்சி சார்பில் அரசு பொருட்காட்சி நடத்தி அதில், நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்ட 6லட்சத்து 60ஆயிரம் ரூபாயை அப்போதைய தூத்துக்குடி ஆட்சியராக பணி புரிந்து வந்த சிவகாமியிடம் ஒப்படைத்தார். அந்த பணம் மூலம் தான் தருவை மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டது.
அதன் பின்பு 22 ஆண்டுகளாக நகராட்சி சார்பிலோ, மாவட்ட நிர்வாகம் சார்பிலோ பொருட்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 25ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளிவிழா கொண்டாட்டமாக தற்போதைய ஆட்சியர் ஆஷிஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து தூத்துக்குடி பீச் ரோட்டில் முத்துநகர் கடற்கரையை உருவாக்கியுள்ளார்.
இந்த கடற்கரையில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி மக்களின் பொழுது போக்கு அம்சமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து நடந்து வருகிறது. தற்போது, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி 45 நாட்கள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 6ம் தேதி துவங்கும் அரசு பொருட்காட்சி முத்துநகர் கடற்கரையில் நடைபெறுகிறது.
பொருட்காட்சியில் 50க்கும் மேற்பட்ட கடைகள், மேஜிக் ஷோ, செல்லப்பிராணிகளின் கண்காட்சி, ராட்டிணம், ரயில்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக இடம்பெற உள்ளன. மேலும், தினசரி இரவு 7மணி முதல் 10மணிவரை சின்னத்திரை,வண்ணத்திரை நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள், ஆடல் பாடல்கள், நாடகங்கள் இடம்பெற உள்ளன.
வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு சார்பில் பொருட்காட்சி செப்டம்பர் 6ம் தேதி துவங்கி 45 நாட்கள் நடைபெற உள்ளதால் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.
Friday, 17 August 2012
Volleyball tournament to be held
National-level volleyball tournament will be organised
in Tuticorin as part of silver jubilee programme marking the bifurcation
of Tuticorin from Tiruenlveli.
The tournament is
scheduled to be held at SAV school ground adjacent to Tuticorin old bus
station from October 8 to October 14. According to a statement, Tamilnad
Mercantile Bank, Tuticorin in association with Tuticorin District
Volleyball Association will host the event – ‘TMB Trophy.’ The best of
talents from across India would compete in the game. For men, sports
personnel from teams including Chennai, Indian Overseas Bank, Customs,
Sports Development Authority of Tamil Nadu, Kochi Port, Kochi
Refineries, teams from Karnataka, Andhra, South Central Railway, ONGC
and other reputed teams would participate in the tourney. As for women’s
events, teams including Southern Railway Chennai, East India Railway,
Kerala Electricity Board, Central Railway from Maharastra and other
teams would compete in the tournament.
Thursday, 16 August 2012
Fashion show with a difference in Tuticorin
A traditional fashion show will mark the silver jubilee
celebration, marking the bifurcation of Tuticorin from Tirunelveli. The
show would be staged on August 19 at Vikasa School, Tuticorin, sources
said on Thursday.
The best of talents would be
selected based on suitable criteria on August 17 ahead of the stage
show. The programme has been designed in various stages. Children up to
five years of age, students from class one to six and students of class
seven to twelve could register their interest to participate in this
event. Besides, the programme is open to students from colleges across
the district. Ten teams of performers would be finalized. Each team
would have six participants, sources added.
Friday, 10 August 2012
மாபெரும் செல்லப் பிராணிகள் கண்காட்சி
தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 26.08.2012 அன்று மாலை 03.00 மணியளவில் தூத்துக்குடி, முத்துநகர் கடற்கரையில் வைத்து கால்நடை பராமரிப்புத்துறையினரால் மாபெரும் செல்லப் பிராணிகள் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இந்தக் கண்காட்சியில் பொது மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளைக் கொண்டு வந்து சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் சிறப்பாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்படும்.
இக்கண்காட்சியில் தங்கள் செல்லப் பிராணிகளுடன் கலந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்கள் கீழ்காணும் முகவரிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
1) உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, தூத்துக்குடி
கைபேசி எண். 9445032545
2) பிரதம மருத்துவர், கால்நடை மருத்துவபெருமனை, தூத்துக்குடி
கைபேசி எண். 9445032604
3) உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, திருச்செந்தூர்
கைபேசி எண்.9842126189
4) உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கோவி;ல்பட்டி
கைபேசி எண்.9443002374
5) கால்நடை மருத்துவர், கால்நடை மருத்துவமனை, ஸ்ரீவைகுண்டம்.
கைபேசி எண்.9443463320
Pet show
Thoothukudi District
was carved out from erstwhile composite Tirunelveli District 25 years ago. To
Commemorate this occasion silver jubilee celebrations are on full swing during
week ends. Special programmes are
organised at Thoothukudi Pearl city
Beach every week-end for the general public.
As part of the silver jubilee celebrations and as per the instructions
of the district Collector it has been proposed to conduct a pet show by the
state Animal Husbandry Department on 26.08.2012 at 03.00 pm at pearl city beach
opposite to Caldwell Higher Secondary School.
The state Animal
Husbandry Department invites pet owners to Participate in this mega event with
their pets. They can bring their pet
dogs, cats, pet birds and aquaria to the show, Special prizes will be
distributed under various categories. Pet
owners can register themselves in the following Address.
Thoothukudi
: Assistant Director of Animal
Husbandry, Thoothukudi
Phone No.9445032545
Thoothukudi :
Clinician, Veterinary Hospital, Thoothukudi.
Phone No.9445032604
Tiruchendur
: Assistant Director of Animal
Husbandry, Tiruchendur
Phone No.9842126189
Kovilpatti
: Assistant Director of Animal Husbandry, Kovilpatti
Phone No.9443002374,
Srivaikundam : Veterinary Surgeon, Veterinary
Hospital, Srivaikundam
Phone No.9443463320.
Thursday, 9 August 2012
தூத்துக்குடியில் 12ம் தேதி படகு போட்டி
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவையொட்டி வருகிற 12ம் தேதி வான்தீவிலிருந்து முத்துநகர் கடற்கரை வரை படகு போட்டி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெள்ளிவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவையொட்டி வருகிற ஞாயிற்றுக் கிழமை (12ம் தேதி) மீன்வளத்துறை சார்பில் கலாச்சார வாரவிழா தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெறுகிறது. அன்று வான்தீவில் இருந்து முத்துநகர் கடற்கரை வரை நாட்டுப்படகு போட்டி நடக்கிறது. போட்டிகள் மாலை 5 மணி முதல் மாலை 6மணி வரை நடக்கிறது.
இதில், திரேஸ்புரம், இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்த 14 பைப்பர் படகுகளில் மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பின்னர் கடலோர காவல் படையினரின் கலை நிகழ்ச்சிகளும், முத்துநகர் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகளும், வான வேடிக்கைகளும் நடைபெற உள்ளன. விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Friday, 27 July 2012
Tuesday, 24 July 2012
தூத்துக்குடி கடற்கரையில் நடந்த உணவுத் திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளதால் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி நேற்று மாலையில் கடற்கரையில் நடந்த உணவுத் திரு விழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தோறும் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில், சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று மாலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டு, விதவிதமான உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்தன. விழாவையொட்டி பிரைடு ரைஸ், சாண்ட்விச் உள்ளிட்ட சிறப்பு உணவுகள் தயாரிப்பு போட்டியும் நடத்தப்பட்டது. இதற்காக பெயர் முன்பதிவு செய்தவர்கள் நேற்று மாலையில் நடந்த போட்டிகளில் பங்கேற்று, உணவுகளை தயாரித்தனர்.
உணவுத் திருவிழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமை தாங்கி, சிறந்த முறையில் உணவு தயாரித்தவர்களை தேர்வு செய்தார். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் வரவேற்றுப் பேசினார். மைதானத்தை சிறப்பாக வடிவமைத்த ஆக்கிடெக் ஜீன், உணவு நிறுவனங்களை ஒருங்கிணைத்த மாநகர உணவு அலுவலர்கள் சந்திரமோகன், ராமகிருஷ்ணன், தூத்துக்குடி ஒன்றிய அலுவலர் ஆகியோருக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
விழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்களிடம் உணவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்கான சரியான பதிலை எழுதி கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உணவுத் திருவிழாவையொட்டி முத்துநகர் கடற்கரை விழாக்கோலத்தில் இருந்தது.
Monday, 16 July 2012
மாபெரும் உணவுத்திருவிழா மற்றும் பெண்களுக்கான சமையல் போட்டிகள் - 22.07.2012.
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளி விழா கொண்டாட்டம்
மாபெரும் உணவுத்திருவிழா மற்றும் பெண்களுக்கான
சமையல் போட்டிகள் - 22.07.2012.
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக,
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள முத்துநகர் கடற்கரையில்; வாரந்தோறும்
ஞாயிற்றுக்கிழமைகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக 22.07.2012 ஞாயிற்று கிழமையன்று மாலையில் பொழுதுபோக்கு
அம்சங்களை உள்ளடக்கிய மாபெரும் உணவுத்திருவிழாவினை நடத்திட, தூத்துக்குடி
மாவட்ட வெள்ளிவிழா குழுவினரும், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையும் இணைந்து
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாபெரும் உணவுத்திருவிழாவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரியமான, பிரசித்தி பெற்ற, புதுமையான உணவு
வகைகளை மக்களுக்கு வழங்கிட, பெயர்பெற்ற 30க்கும் மேற்பட்ட உணவகங்கள்
மற்றும் வணிக நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
மேலும், இந்த உணவு திருவிழாவில் பொதுமக்களும், பெண்களும் கலந்து கொள்ளக்கூடிய
1.ஐஸ்கிரீம் அழகுபடுத்தும் போட்டி (Ice Cream Topping)
2.சாண்ட்விச் தயாரித்தல்
3.காய்கறிகள் அலங்கார போட்டி,
4. நூடுல்ஸ் மற்றும் வெரைட்டி சாப்பாடு (Fried Rice) தயார் செய்தல்,
5.கிரீம் கொண்டு அழகுபடுத்துதல் (Fresh Cream Decoration)
ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுடைய பெண்கள் தங்களது பெயரை dofssatuty@gmail.com என்ற மின்னஞ்சல்
அல்லது 9791428191 ஃ 7708998399 என்ற அலைபேசி எண்களில் 22.07.2012 மாலை 3.00 மணிவரை பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு செய்த நபர்களிலிருந்து 22.07.2012 மாலை 5.00 மணியளவில் முத்துநகர்
கடற்கரையில் குலுக்கல் முறையில் ஒவ்வொரு போட்டிகளுக்கும் ஐந்து நபர்கள்
தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
போட்டிக்கு தேவையான அனைத்து மூலப்பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் அனைத்து
பொருட்களும்நகரின் பிரபலமான உணவகங்கள் ஃ பேக்கரிகள் மூலமாக வழங்கப்படும்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், உணவுத் திருவிழாவில் பங்குபெறவரும் பொதுமக்களுக்கான அதிர்ஷ்ட
போட்டி மற்றும் வினாடிவினா (குயிஸ்) போட்டிகளும் நடைபெறும். இந்த
வெள்ளிவிழா கொண்டாட்ட உணவுத்திருவிழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள
வருமாறு தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்ட குழுவின் தலைவர் ஃ
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆஷிஷ் குமார், இ.ஆ.ப., தெரிவித்தார்
Saturday, 14 July 2012
காவல் துறை சார்பில் வெள்ளிவிழா கலை நிகழ்ச்சிகள் முத்துநகர் கடற்கரையில் நாளை நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இவ்வாண்டு வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது. கால்டுவெல் பள்ளி எதிரில் உள்ள முத்துநகர் கடற்கரையில் கடந்த 1ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிவிழா தொடர்பாக கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நாளை (15ம் தேதி) மாலை 6 மணிக்கு காவல் துறை வழங்கும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெறுகிறது. இதில், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பலகுரல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, காவல் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி, ஓரங்க நாடகம் போன்றவைகளும் சீலன் சுருதி குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.
பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கலை நிகழச்சிகளை கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கலை நிகழச்சிகளை கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.


01:06
sanju











