Tuesday, 27 March 2012

வெள்ளி விழாவை முன்னிட்டு தயாரித்து வெளியிடப்பட்டுள்ள பாடல் வரிகள் பின்வருமாறு:-



எங்கள் ஊரிது எங்கள் உறவிது முத்து நகரென்னும் பேரிது
தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் பிறந்த ஊரிது
தமிழகத்தின் நுழைவு வாயிலாம் துறைமுகத்தைக் கொண்டது

பல அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்,
தலைவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியிது.

புதுமை கவிதையில் புரட்சி படைத்த பாரதி பிறந்தது நம் ஊரே
வெள்ளையரை எதிர்த்து சுதேசி கப்பலை இயக்கிய வ.உ.சி. நம் ஊரே
கட்டபொம்மன் ஊமைத் துரை அண்ணன் தம்பி இருவரும்
பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை கட்டி வரி கட்ட மறுத்து
அந்நியரை எதிர்த்து வெற்றி வாகையை சூடினரே.

ஆங்கில ஆட்சியரை மணியாச்சி என்னும் ஊரில் சுட்டுக்கொன்று
தன் உயிர் மாய்த்த வாஞ்சி நாதனே எங்கள் வ.உ.சி.யே!
எங்கள் கட்டபொம்மனே! எங்கள் ஊமைத் துரையே! எங்கள் பாரதியே!

எத்தனை வளங்கள் கடலில் உண்டு இது போல் செல்வம் வேறெங்குண்டு
தூத்துக்குடியின் முத்துக் குளியல் உலகம் முழுவதும் அறிந்ததுண்டு

கடல் அட்டைகள் கடல் ஆமைகள் கடல் பசுக்கள் கடல் குதிரைகள்
முத்துநகர் ஆரம்பித்து இரேமேஸ்வரம் வரையிலும் இருக்கின்ற தீவுகள் அதனால்தானே சுனாமியின்றி பிழைத்தோம் அனைவரும் நலமோடு

பொதிகையில் பிறந்து தரணியில் தவழ்ந்து வழியெங்கும் வாழ வைக்கும் ஆதாரம்
நம் ரத்தத்தில் கலந்து கடலில் கலப்பாள் தாமிரபரணி வாழ்வாதாரம்.
இவை அனைத்தையும் காப்பது நம் பொறுப்பு நம் தூத்துக்குடி வளத்தைக் காத்திடுவோம்

எத்தனை கிராமிய கலைகள் உண்டு. அதை ஆடிட பாடிட கலைஞர் உண்டு.
அண்ணாமலையார் பாடிய சிந்து கழுகுமலையில் என்றும் உண்டு.
ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரும் உண்டு அதில் குமர குருபரர் ஒருவர் உண்டு.
அவர் பாடிய பாடிய பிள்ளைத் தமிழுக்கு தேசம் அனைத்திலும் பேருண்டு.
வில்லுப்பாட்டு பொறந்தது நம் ஊரு அத காத்து நிக்குறது நம் ஊரு.
எத்தனை கலைகள் வந்தாலும் கிராமிய கலைக்கு நிகரேது?

உப்பு விளையுது நம்மூரு அதை தப்பாம உணருது வெளியூரு
அட சில்லுக் கருப்பட்டி நம்மூரு அத சாப்பிட்டு பாத்தாலே படு ஜோரு

பழமை வாய்ந்த மாதா கோவில் நானூறு வருடமாய் இங்குண்டு
பாண்டிய மன்னனின் சிவன் கோவிலும் திருமந்திர நகரில் இன்றும் உண்டு.
நவ கயிலாயங்கள் நவ திருப்பதிகள் இருக்கின்ற இடங்கள் நம் ஊரே
மசூதிகள் நிறைந்த இஸ்லாமியர் வாழும் காயல்பட்டினமும் நம் ஊரே
ஆறு படை வீடுகளில் இரண்டாம் வீடு திருச்செந்தூரும் நம் ஊரே
உலகப் புகழ் பெற்ற தசரா நடக்கும் குலசை பட்டினமும் நம் ஊரே

எத்தனை மதங்கள் இருந்தாலும் நாம் அன்பாய் ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
என்றும் உயர்ந்திடுவோம் என்றும் செழித்திடுவோம்
என்றும் வளர்ந்திடுவோம் ஒன்றாய் இணைந்திடுவோம்.


இவ்வாறு அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. இப்பாடலைக் கேட்க

1 comments:

EMPOWER SANKAR said...

Congrats.Nice.Sankar,EMPOWER INDIA

Post a Comment

 
-