Saturday, 14 July 2012

காவல் துறை சார்பில் வெள்ளிவிழா கலை நிகழ்ச்சிகள் முத்துநகர் கடற்கரையில் நாளை நடக்கிறது



தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இவ்வாண்டு வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது. கால்டுவெல் பள்ளி எதிரில் உள்ள முத்துநகர் கடற்கரையில் கடந்த 1ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிவிழா தொடர்பாக கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நாளை (15ம் தேதி) மாலை 6 மணிக்கு காவல் துறை வழங்கும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெறுகிறது. இதில், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பலகுரல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, காவல் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி, ஓரங்க நாடகம் போன்றவைகளும் சீலன் சுருதி குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்டம்
காவல்துறை வழங்கும் கலை நிகழ்ச்சிகள்:

நாள்:- 15.07.2012 மாலை 6 மணி

இடம்:-
முத்துநகர் கடற்கரை, வடக்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி.

நிகழ்ச்சி நிரல்

வரவேற்பு: செண்டை மேளம்
தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை: திரு. ஜெ.ராஜேந்திரன், இ.கா.ப.,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
தூத்துக்குடி மாவட்டம்.

முன்னிலை: திரு. ஆஷிஷ்குமார், இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித்தலைவர்,
தூத்துக்குடி.

தலைமை: திரு. ராஜேஷ்தாஸ், இ.கா.ப.,
காவல்துறை தலைவர்,
தென் மண்டலம், மதுரை.
கலை நிகழ்ச்சிகள்

06.25 வாத்தியக்குழு இன்னிசை
06.35 பள்ளி குழந்தைகளின் வரவேற்பு நடனம்
06.40 நாதஸ்வரம், தவில் கச்சேரி - காவலர்கள்
06.45 தனி நபர் நடனம் - பள்ளி குழந்தைகள்
06.50 தப்பாட்டம்- சதா கலைக்குழு, தூத்துக்குடி.
07.10 காவலர் குழந்தைகள் நடனம்
07.15 ஓயிலாட்டம்
07.25 சிலம்பாட்டம்
07.35 காவலர்கள் குழுவின் பலகுரல் நிகழ்ச்சி
07.45 காவலர்கள் நடன நிகழ்ச்சி
07.55 காவல் மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சி
08.05 ஓரங்க நாடகம் - காவலர்கள்
08.20 சீலன்-ஸ்ரூதி இன்னிசை கச்சேரி

நன்றியுரை திரு. ஜெ. மகேஷ், இ.கா.ப.,
உதவி காவல் கண்காணிப்பாளர்,
தூத்துக்குடி நகரம்.
 
பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கலை நிகழச்சிகளை கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
-