பியர்ள் சிட்டி பீச்சில் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் : அமைச்சர், ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மதுராகோட்ஸ் எதிரில் அமைந்துள்ள பேர்ல் சிட்டி பீச்சில் வெள்ளி விழா தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் .சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
ஜீலை 1ம் தேதி தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரையிலும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமை மாலையிலும் இந்த பேர்ல் சிட்டி பீச்சில் வெள்ளி விழா தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கடற்கரையில் ஏற்கனவே இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் தன்னிறைவு திட்டம் மூலம் ரூ.1.5 கோடி அனுமதிக்கப்பட்டு புதிதாக மண் கொட்டுதல், பாதை அமைத்தல், குப்பைகள் மற்றும் முட்செடிகள் அகற்றுதல் போன்ற பணிகள் முழு மூச்சில் நடைபெறவுள்ளது. இக்கடற்கரையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கடற்கரையை ஒளிமயமாக மாற்றும் விதத்தில் ரூ.15 லட்சம் செலவில் இரண்டு ஜ மாஸ் விளக்குகள் (உயர் கோபுர விளக்கு) அமைத்திடவும், மேலும் நேரு கடற்கரை பூங்காவினை சீரமைத்திடவும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் அனுமதித்திடவும் உள்ளார்.
ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் சேவியர், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் க.லதா, வட்டாட்சியர் கலியுகவரதன், மாநகராட்சி பொறியாளர் ராஜகோபால், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment