Wednesday 21 March 2012

தூத்துக்குடியின் பெருமையை விளக்கி பாடல் வெள்ளிவிழா ஆண்டை ஒட்டி ஆசிரியர் இருவர் தயாரிப்பு




தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட வெள் ளி விழா ஆண்டை ஒட்டி மாவட்டத்தின் பெ ருமை குறித்து தனியார் பள்ளி ஆசிரியர் இருவர் பாட்டு தயாரித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் மூலம் பாடப்பட்டு சி.டியாக வரும் 25ம் தேதி வெளியிடுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் துவங்கி 25 ஆண்டுகள் நிø றவு பெற்று விட்டன. இந்த விழாவை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கö லக்டர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். வெள்ளி விழாவை பெரிய அளவில் நடத்துவதற்கு உள்ளாட்சி தேர்தல் வந்ததால் நடத்த முடியவில்லை. அதன் பின்னர் வெள்ளி விழா நிறைவினை பெரிய அளவில் நடத்த மாவட்ட கலெக்டர் ஆஷீ ஷ்குமார் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அதனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.

இந் நிலையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் நன்னடத்தை விதிகள் தூத்துக்குடி மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டதால் எந்த ஒரு அரசு நிகழ்ச்சியும் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.தற்போது தேர்தல் நன்னடத்தை வரும் 25ம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் அன்றில் இருந்து வெள்ளி விழா நிகழ்ச்சிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் அமர்களமாக நடக்க உள்ளது. வெள்ளி விழா ஆண்டின் துவக்கமாக வரும் 25ம் தேதி காலை மாரத்தான் ஓட்டத்துடன் துவங்குகிறது.

 மாலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடக்கிறது.இந்த விழாவை ஒட்டி தூத்துக்குடி சிறப்புகள் குறித்து தூத்துக்குடி தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பாடலாக எழுதியுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னைக்கு சென்று பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் மூலம் அதனை பாடலாக பாடி சி.டியை கொண்டு வந்துள்ளனர். இந்த சி.டி வரும் 25ம் தேதி மாலை நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் வரை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. அக்டோபர் 19, 20, 21ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நி றைவு விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது.இந்த வெள்ளி விழா வை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் எப்போதும் தூய்மையாக இரு க்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் பொழுது போக்கிற்கு புதிய பீச்கள் உருவாக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான கட்டடங்களை புதியதாக உருவாக்க வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்ட், மேம்பாலங்கள் உருவாக்குவதற்கும், மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தியடையும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்கும் வெள்ளி விழா ஆண்டில் மாவட்ட நிர்வாகம் அதிரடி திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி  : தினமலர்

0 comments:

Post a Comment

 
-