Saturday, 22 September 2012

ஒருநிமிடம் மட்டும் - நாளை மாலை வரை முன்பதிவு!!


ஒருநிமிடம் மட்டும் - நாளை மாலை வரை முன்பதிவு!!


தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கலைநிகழ்ச்சியில் இடம்பெறும் "ஒரு நிமிடம் மட்டும்" நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பும் போட்டியாளர்கள் நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக நாளை (23ம் தேதி) முத்துநகர் கடற்கரையில் அரசு பொருட்காட்சி அரங்கில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  

இதில், "ஒரு நிமிடம் மட்டும்" (Just a Minute JAM) என்னும் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.  இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு கலையரங்க மேடையில் ஒரு நிமிடம் மட்டுமே ஒதுக்கப்படும். இந்த ஒரு நிமிடத்தில் போட்டியாளர்கள் தங்களது தனித்தன்மையை சொற்பொழிவு, பாடல், நாட்டியம், மிமிக்ரி, மேனோ ஆக்டிங் ஆகிய வகையில் மேற்கொள்ளலாம். 

சிறப்பாக நிகழ்ச்சி செய்யும் போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த போட்டிகளுக்கான பதிவினை முத்துநகர் கடற்கரை பொருட்காட்சி அரங்க அலுவலகத்தில் நாளை (23ம் தேதி) மாலை 5 மணி வரை மேற்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
-