Monday 27 August 2012

தூத்துக்குடியில் செல்லப்பிராணிகள் கண்காட்சி




தூத்துக்குடியில், மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி, நேற்று மாலை செல்லப் பிராணிகள் கண்காட்சி நடந்தது. 16 வகையிலான 146 நாய்கள் பங்கேற்றன. நெல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி தனிமாவட்டமாக உதயமாகி, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை யொட்டி,"வெள்ளிவிழா', முத்துவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

இதன் ஒருபகுதியாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், செல்லப்பிராணிகள் கண்காட்சி நேற்று மாலை, இங்குள்ள"முத்துநகர்' கடற்கரையில் நடத்தப்பட்டது.  தூத்துக்குடியைச் சேர்ந்த, ஜெர்மன் ஷெப்பர்டு, புல்மாஸ்டிப், பொமோரியன், ராட் விலர்,ராஜபாளையம், நாட்டு வகை என மொத்தம் 16 வகையிலான, 146 நாய்கள் பங்கேற்றன.

 நாய்க்குட்டி கண்காட்சி, நாய்களின்அடைஅலங்கார அணிவகுப்பு, எஜமானர் இடும் கட்டளைக்கு கீழ்ப்படிதல், உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. ஆடு, ஒட்டகமும் இதில் பங்கேற்றன. ஏற்பாடுகளை, டி.ஆர்.ஓ., அமிர்தஜோதிதலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

0 comments:

Post a Comment

 
-