தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவையொட்டி வருகிற 12ம் தேதி வான்தீவிலிருந்து முத்துநகர் கடற்கரை வரை படகு போட்டி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெள்ளிவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவையொட்டி வருகிற ஞாயிற்றுக் கிழமை (12ம் தேதி) மீன்வளத்துறை சார்பில் கலாச்சார வாரவிழா தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெறுகிறது. அன்று வான்தீவில் இருந்து முத்துநகர் கடற்கரை வரை நாட்டுப்படகு போட்டி நடக்கிறது. போட்டிகள் மாலை 5 மணி முதல் மாலை 6மணி வரை  நடக்கிறது. 
இதில், திரேஸ்புரம், இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்த 14 பைப்பர் படகுகளில் மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பின்னர் கடலோர காவல் படையினரின் கலை நிகழ்ச்சிகளும், முத்துநகர் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகளும், வான வேடிக்கைகளும் நடைபெற உள்ளன. விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். 


 07:55
07:55
 sanju
sanju
 

 Posted in:
 Posted in:   
 
 
 
 
0 comments:
Post a Comment